​​ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்

Published : Dec 06, 2018 5:30 PM

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.20 கோடிக்கு ஏலம்

Dec 06, 2018 5:30 PM

இருபதாம் நூற்றாண்டின் இணையில்லா விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ அறிஞர் எரிக் குட்கைண்ட் (Eric Gudkind) என்பவருக்கு ஒன்றரை பக்க கடிதத்தை ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார். கடவுள் நம்பிக்கை குறித்து அதில் ஐன்ஸ்டீன் எழுதி இருப்பதால் "கடவுள் கடிதம்" என்று இது அழைக்கப்படுகிறது.

அதில், கடவுள் என்ற வார்த்தை தன்னைப் பொருத்தவரை ஒன்றும் இல்லை என்றும், மனிதன் பலவீனம் அடையும் போது உண்டாவதே கடவுள் என்றும் ஐன்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதமானது நியூயார்க்கில் உள்ள மையத்தில் ஏலம் விடப்பட்டது.

10 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 கோடியே 54 லட்சம் ரூபாய்க்கு கடிதம் ஏலம் போயுள்ளது.