​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CBI-ல் ஒரே இரவில் அதிகாரிகளிடையே மோதல் வெடித்து விட்டதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Published : Dec 06, 2018 4:23 PM

CBI-ல் ஒரே இரவில் அதிகாரிகளிடையே மோதல் வெடித்து விட்டதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

Dec 06, 2018 4:23 PM

சிபிஐயில் ஏற்பட்ட அதிகார மோதலில் மத்திய அரசு திடீரென தலையிட்டது ஏன் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதை எதிர்த்து அலோக் வர்மா தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இரு உயர் அதிகாரிகளுக்கும் இடையேயான சண்டை ஒரே நாள் நள்ளிரவில் ஏற்பட்டு விடவில்லை என்றிருக்கும்போது, இந்த விவகாரத்தில் தேர்வுக் குழுவிடம் ஆலோசிக்காமல் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அலோக் வர்மாவை ஏன் நீக்கியது என்று கேட்டார்.

இன்னும் சில மாதங்களில் அலோக் வர்மா ஓய்வு பெறவுள்ள நிலையில், காத்திருக்காமல் அல்லது தேர்வுக் குழுவிடம் ஆலோசிக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் என்றும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.