​​ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Published : Dec 06, 2018 11:26 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Dec 06, 2018 11:26 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. மான் இனத்தில் புள்ளிமான், கடமான், வெளிமான் ஆகிய வகை மான்கள் உள்ளன.

பவானிசாகர் வனச்சரகத்தில் தெங்குமரஹடா காட்டில் மாயாற்றை ஒட்டிய பகுதிகளில் வெளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. புலி, சிறுத்தை ஆகியன இந்த வெளிமான்களை வேட்டையாடி உணவாக உட்கொள்கின்றன. பவானிசாகரிலிருந்து தெங்குமரஹடா செல்லும் சாலையோரத்தில் வெளிமான்கள் நடமாடுவதைப் பேருந்தில் செல்லும் பயணிகள் கண்டுகளித்துச் செல்கின்றனர்.