​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகலில் விசாரணை

Published : Dec 06, 2018 11:16 AM

அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகலில் விசாரணை

Dec 06, 2018 11:16 AM

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. மதுரையைச் சேர்ந்த ஜலால் என்பவர், கடந்த 3 நாட்களாக நடைபெறும் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு முறையிட்டார். இதனால் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதியுறுவதாகவும் அவர் புகார் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு மனுவாக தாக்கல் செய்தால் இன்று பிற்பகலில் விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்தது.