​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பெண்

Published : Dec 06, 2018 11:05 AM

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பெண்

Dec 06, 2018 11:05 AM

மஹாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து பெண்கள் கீழே குதித்து விபத்தில் சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையத்தில், ரயில் ஒன்று நடைமேடையில் இருந்து புறப்பட்டதும், ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து சில பயணிகள் கீழே இறங்கினர். அதில் ஒரு பெண், பொறுமையாக இறங்குவது போல், ஒரு காலை நடைமேடையிலும், ஒரு காலை ரயிலிலும் வைத்தபடி இறங்கினார். இதில் நிலை தடுமாறி விழுந்த அவரை ஜிஆர்பி காவலர்கள் ஓடிச் சென்று அங்கிருந்தோர் உதவியுடன் மீட்டனர். அவருக்குப் பின்னால் அடுத்தடுத்து இறங்கியவர்களும் விபத்தில் சிக்கினர்.