​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

Published : Dec 06, 2018 10:20 AM



இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தை கிறிஸ்துமஸ் தினத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

Dec 06, 2018 10:20 AM

இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலத்தை வரும் வருகிற 25ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தில் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு- தெற்கு கரைகளை இணைக்கும் விதமாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

தேவகவுடா பிரதமராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு, 2002ல் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கடந்த 16 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் தொடக்க விழா பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. முதல் சோதனை ஓட்டமாக சரக்கு ரயில் ஒன்று இப்பாலத்தின் மீது கடந்த 3ம் தேதி வெற்றிகரமாக பயணித்தது.