​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மூவருக்கு 3ஆண்டு சிறை தண்டனை

Published : Dec 05, 2018 5:27 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மூவருக்கு 3ஆண்டு சிறை தண்டனை

Dec 05, 2018 5:27 PM

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் உள்ளிட்ட மூவருக்கு டெல்லி நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது தனியார் நிறுவனங்களுக்குச் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நவம்பர் 30இல் டெல்லி பட்டியாலா அவுஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா, இணைச் செயலர் குரோபா, சாம்ரியா, விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட் நிறுவனத்தின் விகாஸ் பத்னி, ஆனந்த் மல்லிக் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தது.

அவர்களுக்கான தண்டனை விவரத்தை இன்று அறிவித்தது. எச்.சி.குப்தா, குரோபா, சாம்ரியா ஆகிய மூவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

விகாஸ் மெட்டல்ஸ் அண்டு பவர் லிமிடெட்டுக்கு ஒரு இலட்ச ரூபாய் அபராதமும், அதன் மேலாண் இயக்குநர் விகாஸ் பத்னி, அதிகாரி ஆனந்த் மல்லிக் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.