​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சந்திரபாபு நாயுடு உடன் தெலங்கானாவில் ராகுல் காந்தி பரப்புரை

Published : Dec 05, 2018 4:16 PM

சந்திரபாபு நாயுடு உடன் தெலங்கானாவில் ராகுல் காந்தி பரப்புரை

Dec 05, 2018 4:16 PM

சீன தயாரிப்புகளை தவிர்த்து, Made in Telangana என்ற பெயரில் பொருட்களை உற்பத்தி செய்யும் வகையில் உள்ளூர் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்திருக்கிறார்.

தெலங்கானாவின் சூர்யாபேட் ((Suryapet)) மாவட்டத்தின் கோடாடு ((Kodad)) பகுதியில், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்தி மோடி மீதும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அமல் உள்ளிட்டவை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

தெலங்கானாவில் உள்ளூர் உற்பத்தி திட்டங்களை ஊக்குவிப்பதன் மூலம், மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் Made In Telangana என இடம்பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்..