​​ சிரியா உள்நாட்டுப் போரால் அகதிகளானவர்களை சந்தித்தார் ஏஞ்சலினா ஜோலி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிரியா உள்நாட்டுப் போரால் அகதிகளானவர்களை சந்தித்தார் ஏஞ்சலினா ஜோலி


சிரியா உள்நாட்டுப் போரால் அகதிகளானவர்களை சந்தித்தார் ஏஞ்சலினா ஜோலி

Jan 29, 2018 11:07 AM

ஐ.நா.சபையின் சிறப்புத் தூதரான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஜோர்டான் நாட்டின் ஜத்தாரி முகாமில், சிரிய அகதிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சுமார் 85 ஆயிரம் பேர் இந்த முகாமில் அகதிகளாக உள்ளனர். தமது இரண்டு குழந்தைகளுடன் முகாமுக்கு சென்ற நடிகையை, அங்குள்ளவர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

சிரியாவில் இருந்து வந்த குடும்பங்களை சந்தித்துப் பேசிய ஏஞ்சலினா ஜோலி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அகதி குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி மற்றும் சேவைக்கு பயிற்சிகளை அளிக்க உதவும் டைகர் கேர்ள்ஸ் என்ற திட்டத்தையும் ஏஞ்சலினா ஜோலி தொடங்கி வைத்தார்.