​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேகதாது அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவை 6-ஆம் தேதி கூடுகிறது

Published : Dec 04, 2018 9:20 PM

மேகதாது அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவை 6-ஆம் தேதி கூடுகிறது

Dec 04, 2018 9:20 PM

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டப்பேரவை 6-ஆம் தேதி கூடுகிறது. 

இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, வருகிற 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

6-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற  திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக வருகிற 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கூடும் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் மட்டுமே விவாத த்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.