​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published : Dec 04, 2018 9:04 PM

சர்வதேச விண்வெளி மையத்தில் புதிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Dec 04, 2018 9:04 PM

சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்த வீரர்களை அங்கு ஏற்கனவே உள்ள வீரர்கள் உற்சாகமாக வரவேற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சுழற்சி முறையில் வீரர் - வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் நேற்று கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து சோயுஸ் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட ரஷ்யாவின் காஸ்மோநாட் ஒலெக் கொனென்கோ (cosmonaut Oleg Kononenko), நாசாவின் ஆன்னி மெக்லைன் (Anne McClain), கனடாவின் டேவிட் செயிண்ட் ஜேக்வஸ் (David Saint-Jacques) ஆகியோரை சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்கனவே உள்ள வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.