​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரான்ஸில் மக்களின் போராட்டங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ரத்து

Published : Dec 04, 2018 8:15 PM

பிரான்ஸில் மக்களின் போராட்டங்களை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி ரத்து

Dec 04, 2018 8:15 PM

மக்கள் நடத்திய போராட்டங்களை அடுத்து பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்வதாக பிரான்ஸ் நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி, அரசு வெளியிட்ட அறிவிப்பை கண்டித்து கடந்த சில வாரங்களாக  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மஞ்சள் நிற உடை அணிந்த போராட்டக்காரர்கள், பாரிஸ் நகரம் உள்ளிட்ட 1600 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் பதற்றநிலை உருவானதை அடுத்து, வரியை ரத்து செய்ய பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது.

இதுகுறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய  அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப், பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கூறி உள்ளார்.