​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானாவில் தேர்தலையொட்டி நடத்திய வாகன சோதனையில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் சிக்கியது

Published : Dec 04, 2018 5:39 PM

தெலங்கானாவில் தேர்தலையொட்டி நடத்திய வாகன சோதனையில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் சிக்கியது

Dec 04, 2018 5:39 PM

தெலங்கானா மாநிலத்தில் தேர்தலையொட்டி காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் சிக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாரங்கல் மாவட்டத்தில் ஜங்கான் என்ற இடத்தில் காவல்துறையினர் அந்த வழியாக சென்ற கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, கட்டுக்கட்டாக பண கட்டுகள் உள்ளே இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.  மொத்தம் 5 கோடியே 80 லட்சம் லட்சம் ரூபாயை அவர்கள் கைப்பற்றினர்.

வாக்காளர்களுக்கு வினியோகிக்க அந்த பணம் கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பாக காரில் வந்த 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதே போன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சோதனையில் காரில் இருந்து 70 லட்சம் ரூபாய் பிடிபட்டது. அதனை கொண்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.