​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2.0 படம் ரூ. 400 கோடி வசூல், மெகா பிளாக்பஸ்டர்: லைகா புரொடக்சன்ஸ் பெருமிதம்

Published : Dec 03, 2018 6:50 PM

2.0 படம் ரூ. 400 கோடி வசூல், மெகா பிளாக்பஸ்டர்: லைகா புரொடக்சன்ஸ் பெருமிதம்

Dec 03, 2018 6:50 PM

2 பாய்ன்ட் ஓ திரைப்படம், 400 கோடி ரூபாய் வசூலித்து மெகா பிளாக்பஸ்டர் சாதனை படைத்துள்ளதாக லைகா படத்தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது 2 பாய்ன்ட் ஓ திரைப்படம்.

படம் வெளியாகி 4 நாட்கள் கடந்த நிலையில் 400 கோடி ரூபாய் வசூலித்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாக லைகா நிறுவனம் வெளிப்படையாகத் அறிவித்துள்ளது. இப்படம் பிளாக்பஸ்டர் மட்டுமல்ல, மெகா பிளாக்பஸ்டர் என லைகா அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்தியில் மட்டும் இப்படம் 100 கோடியைக் கடந்துள்ளதாக இந்தி வெளியீட்டைப் பெற்ற தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் கரன் ஜோஹர் தமது டிவிட்டரில் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் வெளியான தென்னிந்திய மொழிப்படங்களிலேயே அதிக வசூல் சாதனையைப் படைத்தது 2 பாய்ன்ட் ஓ எனக் கூறப்படுகிறது