​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர முதலமைச்சர் உண்மையைத் திரித்துக் கூறுவதாகச் சந்திரசேகர ராவ் பேச்சு

Published : Dec 03, 2018 11:23 AM

ஆந்திர முதலமைச்சர் உண்மையைத் திரித்துக் கூறுவதாகச் சந்திரசேகர ராவ் பேச்சு

Dec 03, 2018 11:23 AM

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உண்மையைத் திரித்துக் கூறுவதாகத் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர ராவ், ஐதராபாத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ததாகவும் சைபராபாத் தனது சிந்தனையால் உருவானதாகவும் சந்திரபாபு பேசிவருவதாகத் தெரிவித்தார். சார்மினார் கூடத் தன்னால் கட்டப்பட்டது எனச் சந்திரபாபு தெரிவிப்பார் என்றும் சந்திரசேகர ராவ் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றிபெற்றால், தெலங்கானாவின் அதிகார மையம் ஐதராபாத்தில் இருந்து டெல்லிக்கும் அமராவதிக்கும் மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.