​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி ஐதராபாத்தைவிட்டு ஓடுவார் - யோகி ஆதித்யநாத்

Published : Dec 03, 2018 10:49 AM

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி ஐதராபாத்தைவிட்டு ஓடுவார் - யோகி ஆதித்யநாத்

Dec 03, 2018 10:49 AM

இந்தியா தனது தந்தை நாடு என்றும், இங்கிருந்து வெளியேறுமாறு யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் தண்டூர் என்னுமிடத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஐதராபாத்தில் இருந்து நிசாம் தப்பி ஓடியதைப் போல ஓவைசியும் ஓடிவிடுவார் எனத் தெரிவித்தார். ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதற்குப் பதிலளித்த ஓவைசி, இந்தியா தனது தந்தை நாடு என்றும், இங்கிருந்து வெளியேறுமாறு யாரும் தன்னைக் கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

நிசாம் ஐதராபாத்தை விட்டு ஓடவில்லை என்றும், இந்திய அரசுக்கு வேண்டியவரான நிசாம் சீனப்போரின்போது தன்னிடமுள்ள தங்கத்தை அரசுக்குக் கொடுத்த வரலாறு யோகி ஆதித்யநாத்துக்குத் தெரியவில்லை என்றும் ஓவைசி பேசினார்.