​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் இன்று ஆதரவு திரட்டுகிறார்

Published : Dec 03, 2018 8:58 AM

தெலங்கானா மாநிலத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு பிரதமர் இன்று ஆதரவு திரட்டுகிறார்

Dec 03, 2018 8:58 AM

தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில், இன்று நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக தலைவர் அமித் ஷா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் அங்கு வாக்கு சேகரித்தனர்.
இதனையடுத்து ஹைதராபாத்தில் இன்று பிரதமர் மோடி பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டவுள்ளார்.

நாளை மறுநாளுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்வதால் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி கடந்த வாரம் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய நிலையில், இன்று மீண்டும் பிரச்சாரத்திற்காக வருகிறார்.