​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்திற்கு சீல்வைப்பு

Published : Dec 02, 2018 9:34 AM



திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பு மையத்திற்கு சீல்வைப்பு

Dec 02, 2018 9:34 AM

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த ஸ்கேன் மையத்திற்கு சீல்வைக்கப்பட்டு, அதனை நடத்தி வந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவு கருக்கலைப்பு நடைபெறுவதாக மருத்துவப் பணிகள் ஆய்வுக்குழுவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த மையத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஆய்வுக்குழுவினர் பொன்னுசாமி நகரில் உள்ள பங்களாவில் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஸ்கேன் கருவியை பறிமுதல் செய்தனர்.

மேலும் பலவிதமான நுட்பமான முறைகளில் அந்த வீட்டில் நோயாளிகளை மறைத்து வைத்து கருக்கலைப்பு போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஸ்கேன் மையத்திற்கு சீல்வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஆனந்தி, அவர் கணவர் தமிழ்ச்செல்வன், ஆட்டோ ஓட்டுனர் சிவகுமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கருக்கலைப்பு மையத்தை நடத்திவந்த ஆனந்தி ஏற்கனவே 3 முறை கைதாகி ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.