​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

Published : Dec 02, 2018 7:03 AM



குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது

Dec 02, 2018 7:03 AM

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேற்றத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டாலும், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தீவிபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடந்து, அங்கு மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந் நிலையில், தடை நீக்கப்பட்டு குரங்கனியில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை மலையேற்றம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மலையேற்றம் செல்ல அனுமதி கேட்டு யாரும் வரவில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.