​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு மலையேற்றம்

Published : Nov 30, 2018 8:54 PM



குரங்கணி வனப்பகுதியில் 8 மாதங்களுக்குப் பிறகு மலையேற்றம்

Nov 30, 2018 8:54 PM

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் 8 மாத தடைக்குப்பிறகு, கடும் கட்டுப்பாடுகளுடன் மலையேற்றத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அங்கு நேரிட்ட காட்டுத்தீயில் 23 பேர் பலியாகினர். இதையடுத்து, மலையேற்றப் பயிற்சிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வெடிபொருட்கள், போதைப்பொருட்கள், சமையல் பாத்திரங்கள், பாலீத்தீன் பைகள், ஆயுதங்கள் போன்றவற்றை கொண்டு செல்லக்கூடாது, பயிற்சியும் பதிவும் பெற்ற வழிகாட்டிகள் மூலம் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் தற்போது மலையேற்றத்துக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து 8 மாதங்களாக நீடித்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் குரங்கணியிலிருந்து டாப்ஸ்டேசனுக்கு மட்டும் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. குரங்கணியிலிருந்து கொழுக்குமலை செல்லும் வழியில் மலையேற்றம் செல்வதற்கான தடை நீடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.