​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜிக்கு "செவாலியர் விருது

Published : Nov 28, 2018 8:50 PM

விப்ரோ நிறுவனர் அசீம் பிரேம்ஜிக்கு "செவாலியர் விருது

Nov 28, 2018 8:50 PM

இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.டி நிறுவனங்களுள் ஒன்றான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது விப்ரோ நிறுவனம். தனது இளம் வயதில், எண்ணெய் நிறுவன தலைவராக பணியைத் தொடங்கிய விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி, இன்று, நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரராக திகழ்கிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவை மேம்பாடு அடைய அவர் ஆற்றிய பணியை கவுரவிக்கும் விதமாகவும், ஏழை-எளிய மக்களின் வாழ்க்கையை மேம்பட அறக்கட்டளை அமைத்து உதவும் மனப்பான்மையை போற்றும் விதமாகவும், செவாலியர் விருது அசீம் பிரேம்ஜிக்கு வழங்கப்பட இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.

பெங்களூருவில் நடைபெறும் விழாவில் விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜிக்கு, செவாலியர் விருதினை, இந்தியாவுக்கு பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டரே ஜிகிலர் ((Alexandre Ziegler)) வழங்கி கவுரவிக்க உள்ளார்.