​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box

Published : Nov 28, 2018 7:02 AM



நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box

Nov 28, 2018 7:02 AM

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box. ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லாக் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தனது இரண்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் ஒரு இளம் தாயின் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பெரும் ஆபத்துகளுக்கு மத்தியில் கண்களை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம். கண்களைத் திறந்தால் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்ற மிரட்டல். இப்படத்தை டானிஷ் இயக்குனர் சூசன் பெய்ர் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் அறிமுக விழா பெர்லினில் நடைபெற்ற போது சாண்ட்ரா புல்லாக்கிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குளிர் காலத்திலும் தோள்பட்டையில் நிற்காத ஆடையுடன் அவர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.