​​ உலகின் மிகவும் வயது முதிர்ந்த மனிதக்குரங்கு உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலகின் மிகவும் வயது முதிர்ந்த மனிதக்குரங்கு உயிரிழப்பு

உலகின் மிகவும் வயது முதிர்ந்த மனிதக்குரங்கு உயிரிழப்பு

Jan 27, 2018 4:13 PM

உலகின் மிகவும் வயது முதிர்ந்த மனிதக்குரங்கான விலா, 60வது வயதில் உயிரிழந்தது.

இந்த பெண் மனிதக்குரங்கு 1957ஆம் ஆண்டு காங்கோ நாட்டில் பிறந்ததாக அறியப்படுகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியாகோ பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மனிதக்குரங்கு 5 தலைமுறைகளைக் கண்டுள்ளது. பூங்கா ஊழியர்கள் மற்றும் பார்வையாளருக்கு மிகவும் விருப்பமான உயிரினமாகவும் விலா இருந்து வந்தது.

மனிதக்குரங்கின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் வரை மட்டுமே என்ற நிலையில், இந்த மனிதக்குரங்கு 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிமை அன்று விலா மனிதக்குரங்கு உயிரிழந்து விட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.