​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
25 கோடி செல்போன்கள் இனி ஸ்விட்ச் ஆப் ஆகி விடும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

Published : Nov 24, 2018 8:35 AM

25 கோடி செல்போன்கள் இனி ஸ்விட்ச் ஆப் ஆகி விடும், ஏர்டெல், ஐடியா, வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

Nov 24, 2018 8:35 AM

இன்னும் சில வாரங்களில் 25 கோடி வாடிக்கையாளர்களின் 2ஜி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளன.

2ஜி செல்போனில் மாதம் ஒன்றுக்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்வோரின் செல்பேசி எண் வருங்காலத்தில் செயலிழந்துவிடும். ஏர்டெல்லுக்கு 10 கோடி வாடிக்கையாளர்களும், வோடோபோன், ஐடியா நிறுவனங்களுக்கு 15 கோடி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

மாதத்திற்கு 35 ரூபாய்க்கும் குறைவாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளருக்கான சேவையை நிறுத்திக் கொள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. இரண்டு சிம்கார்டுகளுடன் கூடிய செல்போன்களை வைத்திருப்போர், தங்களிடம் உள்ள 2ஜி எண்ணுக்கு ரீசார்ஜ் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.