​​ குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பைத் தொடர நடவடிக்கை-செங்கோட்டையன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பைத் தொடர நடவடிக்கை-செங்கோட்டையன்


குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிப்பைத் தொடர நடவடிக்கை-செங்கோட்டையன்

Mar 23, 2018 5:30 PM

அங்கன்வாடி மையத்தில் படிக்கும் குழந்தைகள் அரசு பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அங்கன் வாடி குழந்தைகள் 5 வயதுக்கு மேல் தனியார் பள்ளிக்கு செல்வதாகவும், இதை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அரசுப் பள்ளியிலேயே அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அகில இந்திய அளவிலான பொது தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளதாகக் கூறினார். தற்கொலைகள் எதிர்காலத்தில் இருக்காத வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.