​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

Published : Nov 22, 2018 3:43 PM

திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

Nov 22, 2018 3:43 PM

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ 900 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, செம்பட்டி, ஏ.வெள்ளோடு, சின்னாளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பூக்கள் பயிரிடப்பட்டு, திண்டுக்கல் பூமார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கார்த்திகை திருநாள் மற்றும் வரத்து குறைவு காரணமாக திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

சென்றவாரம் ரூ.500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று 900 ரூபாய்க்கும், 250ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் முல்லைப்பூ, ஜாதிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.