​​ செய்யாறு அருகே கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செய்யாறு அருகே கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு


செய்யாறு அருகே கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு

Jan 26, 2018 4:27 PM

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கர்நாடக மாநில சுற்றுலா பேருந்து மோதி பள்ளி மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அவ்வழியாகச் சென்ற கர்நாடக மாநில அரசுப் பேருந்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

பெரும்பாலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவரான வினோத்குமார், குடியரசுதின விழாவில் கலந்துகொள்வதற்காக சைக்கிளில் சென்றபோது, ஆந்திராவிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கிச் சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அப்போது கர்நாடக மாநில பேருந்துமோதி மாணவன் உயிரிழந்ததாக தகவல் பரவியதையடுத்து, அவ்வழியாக வந்த கர்நாடக அரசுப்பேருந்தை மறித்த அப்பகுதிவாசிகள், ஓட்டுநரை தாக்கியும் பேருந்து மீது கற்களை வீசி பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்தனர்.

அங்கிருந்த போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து பேருந்தை மீட்டு அனுப்பிவைத்தனர்.