​​ ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு: திமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை சாம்பியன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு: திமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு: திமியா பாபோஸ் – கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை சாம்பியன்

Jan 26, 2018 4:25 PM

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஹங்கேரியின் திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை பட்டம் வென்றுள்ளது. ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டம் மெல்போர்னில் நடைபெற்றது.

இதில் ஹங்கேரியின் திமியா பாபோஸ் – பிரான்சின் கிறிஸ்டினா மிலாடனோவிக் இணை, ரஷ்யாவின் ஏகதரினா மகரோவா – எலினா வெஸ்னினா இணையை எதிர்த்து விளையாடியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹங்கேரி-பிரான்ஸ் வீராங்கனைகள் ஆறுக்கு நான்கு, ஆறுக்கு மூன்று என்கிற நேர்செட்களில் வெற்றிபெற்றனர். இவர்கள் இருவரும் கூட்டாகப் பெறும் முதல் கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.