​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Published : Nov 19, 2018 4:42 PM



கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Nov 19, 2018 4:42 PM

கஜா புயல் பாதிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் தலைமையில், சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்ய கோபால், வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், அவற்றை எவ்வாறு கணக்கிட்டு நிர்ணயிப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிப்பட்டிருப்பது குறித்தும், பாதிப்புகளை குறிப்பிட்டு மத்திய அரசிடம் நிதி கோருவதற்காக அறிக்கை தயாரிப்பது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.