​​ கால்டாக்சி ஓட்டுநர் உயிரிழப்புக்கு காரணமான தாமரைச்செல்வன் சஸ்பெண்ட்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கால்டாக்சி ஓட்டுநர் உயிரிழப்புக்கு காரணமான தாமரைச்செல்வன் சஸ்பெண்ட்

கால்டாக்சி ஓட்டுநர் உயிரிழப்புக்கு காரணமான தாமரைச்செல்வன் சஸ்பெண்ட்

Jan 26, 2018 4:23 PM

கால் டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து உயிரிழந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்படும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் வாகன ஓட்டிகளை தரக்குறைவாக பேசுவது, அடித்து உதைப்பதை வாடிக்கையாக கொண்டவர் என்று புகார்கள் எழுந்துள்ளன.

முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த தாமரைச்செல்வன், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்வது குறித்து, காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் அன்பு, அடையாறு துணை ஆணையர் ரோகித் நாதன் ஆகியோர் தரமணி காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சாரங்கன், மாஜிஸ்திரேட் விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மணிகண்டனை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன்,வாகனஓட்டிகளை தரக்குறைவாக பேசுவது, அவமரியாதையாக நடந்து கொள்வது என ஏற்கனவே புகார்கள் உள்ளன. மேலும், அவர் வாகன ஓட்டிகளிடம் அத்துமீறுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.