​​ புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Published : Nov 17, 2018 2:27 PM



புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் பழனிசாமி

Nov 17, 2018 2:27 PM

புயல் பாதித்த பகுதிகளை நாளை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வனவாசியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். புயல் அடித்து முடிந்த உடனேயே பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கே நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், இவ்வளவு விரைந்து செயல்படுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு மாவட்டங்களுக்கு மேலும் 5 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், துணை முதலமைச்சரும் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கிவிட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். தாம் நாளை நேரில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

புயலால் ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மருத்துவ முகாம்கள், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் பயன்பெற்றிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.