​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலப்புமணம் செய்ததால் ஓராண்டு கழித்து தம்பதி ஆணவக்கொலை

Published : Nov 16, 2018 4:14 PM

கலப்புமணம் செய்ததால் ஓராண்டு கழித்து தம்பதி ஆணவக்கொலை

Nov 16, 2018 4:14 PM

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கலப்பு மணம் செய்துகொண்ட தம்பதியை ஓராண்டுக்குப் பின் பெண் வீட்டாரே ஆணவக்கொலை செய்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுடகொண்டப்பள்ளியில் நந்திஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராம்நகர் பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதி, கடந்த 10ஆம் தேதி திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நந்திஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் ஓசூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெலகவாடி ஏரியில், நந்திஸ் - சுவாதி இருவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.

சுவாதியின் உறவினர்களே இருவரையும் ஆணவக்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.