​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புவி வெப்பமயமாதலால் வாழ்வைத் தொலைத்த பனிக்கரடிகள்

Published : Nov 15, 2018 6:42 AM



புவி வெப்பமயமாதலால் வாழ்வைத் தொலைத்த பனிக்கரடிகள்

Nov 15, 2018 6:42 AM

புவி வெப்பமயமாதலை முன்னிட்டு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் பனிக்கரடிகள் குறித்த வீடியோ ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ பதிவில் மெலிந்து எலும்பும் தோலுமான பனிக்கரடி ஒன்று எழுந்து நடக்கக்கூட சக்தி இல்லாமல் ஊர்ந்து செல்கிறது. பின்னர் ஆங்காங்கே கிடக்கும் கழிவுப் பொருட்களை சாப்பிட்டு உயிர் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் பிரச்னையால் பனி உருகிவிட அதிலிருந்த பனிக்கரடியின் உணவான மீன்கள் குறைந்து போனதால் பனிக்கரடிகளின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.