​​ புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளையை மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு ரஷ்ய அர்ப்பணம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளையை மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு ரஷ்ய அர்ப்பணம்

Published : Mar 22, 2018 6:05 PM

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளையை மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு ரஷ்ய அர்ப்பணம்

Mar 22, 2018 6:05 PM

விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருந்துளையை, மறைந்த அண்டவியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் அர்ப்பணித்துள்ளனர்.

ஒஃபியுகஸ் நட்சத்திர கூட்டத்தில் இருந்து காமா கதிர் வீச்சு வெளியேறுவதை வைத்து அங்கு கருந்துளை உருவாகி இருப்பதாக மாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒஃபியுகஸ் நட்சத்திர கூட்டத்தில் இருந்து காமா கதிர்கள் வெளியேறுவதை வைத்து அங்கு நட்சத்திர வெடிப்பு நிகழ்ந்திருப்பதையும், கருந்துளை உருவாகி இருப்பதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருந்துளையை மறைந்த பிரிட்டனின் அண்டவியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.