​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சபரிமலை விவகாரத்தையும் முத்தலாக்கை இணைத்துப் பேசக் கூடாது - அமித்ஷா

Published : Nov 14, 2018 4:37 PM

சபரிமலை விவகாரத்தையும் முத்தலாக்கை இணைத்துப் பேசக் கூடாது - அமித்ஷா

Nov 14, 2018 4:37 PM

சபரிமலை விவகாரத்தையும் முத்தலாக்கையும் இணைத்துப் பேசக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷாவிடம் பெண்ணுரிமை விவகாரத்தில் சபரிமலை மற்றும் முத்தலாக் விவகாரத்தில் பா.ஜ.க. இரட்டை நிலை எடுத்திருப்பதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதனை மறுத்த அவர், சபரிமலைக்கான பிரச்சினை வேறு என்று முத்தலாக் விவகாரம் வேறு என்று தெரிவித்தார்.

மதரீதியாக சர்ச்சைக்குரியது என்று தெரிந்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு அரசியல் நோக்குடன் அவசர அவசரமாக செயல்படுத்திவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இந்தியாவில் 13 கோவில்களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் குருத்வாராக்களில் ஆண்கள் தலையை மூடிக்கொண்டுதான் செல்லவேண்டும் என்றும் தெரிவித்த அவர், ஒவ்வொருவரின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றார்.