​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை

Published : Nov 14, 2018 3:58 PM

மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை

Nov 14, 2018 3:58 PM

சென்னை சைதாப்பேட்டையில் குடும்பத்தகராறில், மனைவியைக் கொன்றுவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்றத்தூரை சேர்ந்த கார்த்திக்-சௌமியா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் சௌமியா சைதாப்பேட்டையில் உள்ள தமது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவரை சமாதானப்படுத்த அங்கு சென்ற கார்த்திக், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மனைவி சௌமியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், அங்கிருந்த கத்தியை எடுத்து, சௌமியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த சௌமியாவின் உடல் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கழுத்தறுபட்ட கார்த்திக்-கிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.