​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Nov 14, 2018 3:03 PM

வரும் கல்வியாண்டில், மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Nov 14, 2018 3:03 PM

வரும் கல்வியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சீருடை மாற்றத்தால் தலா 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துப்பட்டு எம் சிசி பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா மற்றும் நூலகருக்கு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், அடுத்த ஆண்டு 1முதல் 8ம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றப்படுவதாகவும், மாணவர்களுக்கு தலா 4 செட் சீருடைகள் விலையில்லாமல் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

image

டிசம்பர் மாத இறுதியில் மிதிவண்டிகளும், ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினியும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு கல்வி முறை, கலாச்சாரம் ஆகியவற்றை தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ள 100 மாணவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் 3கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தபடுவதாகக் கூறினார்.