​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published : Nov 14, 2018 1:03 PM

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Nov 14, 2018 1:03 PM

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் நீதிமன்ற காவலை நவம்பர் 28ஆம் தேதி வரை, சென்னை சிபிஐ நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

குட்கா வழக்கில் குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களது நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததால், 6 பேரும் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் ஆஜர்படுத்தபட்டனர். அவர்களது நீதிமன்ற காவலை நவம்பர் 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 6 பேரும் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.