​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருமபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி உயிரிழந்த வழக்கில், பிடிபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும் - ஜெயக்குமார் உறுதி

Published : Nov 12, 2018 5:27 PM



தருமபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி உயிரிழந்த வழக்கில், பிடிபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும் - ஜெயக்குமார் உறுதி

Nov 12, 2018 5:27 PM

தருமபுரியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி உயிரிழந்த வழக்கில் பிடிபட்ட இருவருக்கும் தூக்குத் தண்டனை பெற்றுத் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை கிண்டியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஜெயக்குமார், இதுபோன்ற குற்றங்களுக்கு தூக்குத் தண்டனைதான் தீர்வு என்று தெரிவித்தார். தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்தது போலவே ,இந்த வழக்கிலும் இருவருக்கும் உச்சபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறினார்.