​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியரசு தினத்தை சீர்குலைக்க தற்கொலைப்படை பெண் தீவிரவாதி, உளவுத்துறை எச்சரிக்கை

Published : Jan 26, 2018 11:51 AM

குடியரசு தினத்தை சீர்குலைக்க தற்கொலைப்படை பெண் தீவிரவாதி, உளவுத்துறை எச்சரிக்கை

Jan 26, 2018 11:51 AM

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தினத்தில் தற்கொலைப்படை பெண் தீவிரவாதி ஒருவர் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆளுநர் என்.என்.வோரா ஜம்முவில் உள்ள மவுலானா ஆசாத் மைதானத்தில் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதே போன்று ஸ்ரீநகரில் நடைபெறும் விழா, பாதுகாப்பு காரணங்களால் இடம் மாற்றப்பட்டுள்ளது.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் கடும் சோதனைக்கு ஆளாகின்றன.

பொதுவாக குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் இதுபோன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்படுவது வழக்கம்தான் என்றாலும் இளம் பெண் தீவிரவாதி ஒருவர் குறித்து உளவுத்துறையின் எச்சரிக்கையை சாதாரணமாக கருத முடியாது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.