​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

Published : Nov 12, 2018 1:38 PM



கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது - வானிலை ஆய்வு மையம்

Nov 12, 2018 1:38 PM

நாகைக்கு வடகிழக்கே 820 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல், வரும் 15ஆம் தேதி முற்பகலில் நாகை-சென்னை இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில், அதன் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 


கஜா தற்போது புயலாக இருப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் கடல் பகுதியிலேயே தீவிர புயலாக மாறும் என்றும், ஆனால் கரையைக் கடக்கும்போது தீவிரம் குறைந்து புயலாகவே கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.

சென்னையைப் பொறுத்தவரையில் காற்றின் வேகம் இயல்பான அளவிலேயே இருக்கும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். ரெட் அலர்ட் என்பது பொதுமக்களுக்கானது அல்ல என்றும், நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்வதற்காக தரப்படும் எச்சரிக்கை என்றும் அவர் விளக்கம் அளித்தார். ரெட் அலர்ட் கொடுப்பதால் முழு தமிழகத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அர்த்தம் அல்ல எனவும்  பாலச்சந்திரன் தெரிவித்தார்.