​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு ஈஸ்வரன் வலியுறுத்தல்

Published : Nov 12, 2018 1:01 PM



தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு ஈஸ்வரன் வலியுறுத்தல்

Nov 12, 2018 1:01 PM

தீபாவளி அன்று கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே பின்பற்ற முடியாத சூழல் உள்ள நிலையில், முதல் முறையாக பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை பெரும்பாலானோர் கடைபிடித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததற்காக சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார். எனவே இதுதொடர்பான வழக்குகளை ரத்து செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.