​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் புதிதாக 1.97 கோடி ஸ்மார்ட் கார்டுகள் - அமைச்சர் காமராஜ்

Published : Nov 11, 2018 8:50 PM

தமிழகத்தில் புதிதாக 1.97 கோடி ஸ்மார்ட் கார்டுகள் - அமைச்சர் காமராஜ்

Nov 11, 2018 8:50 PM

தமிழகத்தில் புதிதாக ஒரு கோடியே 97 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழாவில், அமைச்சர்கள் காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காரமராஜ், புயல் மற்றும் பருவமழையைக் கருத்தில் கொண்டு தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.