​​ தமிழ் மொழிக்கு தமிழகத்தில் அவமரியாதை நிகழ்ந்துள்ளது -மு.க ஸ்டாலின் பேச்சு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ் மொழிக்கு தமிழகத்தில் அவமரியாதை நிகழ்ந்துள்ளது -மு.க ஸ்டாலின் பேச்சு

Published : Jan 26, 2018 11:48 AM

தமிழ் மொழிக்கு தமிழகத்தில் அவமரியாதை நிகழ்ந்துள்ளது -மு.க ஸ்டாலின் பேச்சு

Jan 26, 2018 11:48 AM

தமிழகத்தில் மொழிப்போருக்கான களம் மீண்டும் உருவாகி உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில், மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் தாய்மொழிக்கு அவமரியாதை செய்யும் நிகழ்வு நடந்துள்ளதாக பேசிய அவர், தமிழை அவமரியாதை செய்தவர்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால் திமுக போராட்டம் நடத்தும் என்று குறிப்பிட்டார்.

குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது என்று கூறிய ஸ்டாலின், இதுகுறித்து சிபிஐ விசாரணைக் கோரியுள்ளதாகவும், அந்த விசாரணை இறுதியில் அவர்கள் சிறைக்குச் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.