​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கத்தி முனையில் பெண்ணைக் கட்டிப்போட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை

Published : Nov 11, 2018 9:43 AM



கத்தி முனையில் பெண்ணைக் கட்டிப்போட்டு நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையர்கள் கொள்ளை

Nov 11, 2018 9:43 AM

ஈரோட்டில் பெண்ணை கத்தி முனையில் கட்டிப் போட்டு 40 சவரன் மற்றும் பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெசியா பேகம் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

நேற்றிரவு வழக்கம் போல் அவர் வீட்டிற்கு சென்ற போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே வீட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்த 8 பேர் கொண்ட முகமூடிக் கொள்ளையர்கள் ஜெசிமா பேகத்தை கட்டிப் போட்டு வாயில் துணியைப் போட்டு அடைத்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த 40 சவரன் நகைகள், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.