​​ மாத ஊதியம் பெறுவோருக்கு வருமான வரியில் சலுகை? மத்திய அரசு தீவிர பரிசீலனை என தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாத ஊதியம் பெறுவோருக்கு வருமான வரியில் சலுகை? மத்திய அரசு தீவிர பரிசீலனை என தகவல்

மாத ஊதியம் பெறுவோருக்கு வருமான வரியில் சலுகை? மத்திய அரசு தீவிர பரிசீலனை என தகவல்

Jan 26, 2018 11:46 AM

மாத ஊதியம் பெறுவோருக்கான வருமான வரியில் சலுகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சொந்தத் தொழில் புரிவோருக்கு பல்வேறு செலவுகளுக்கு வருமான வரியில் சலுகை அளிக்கப்படுகிறது. ஆனால், மாத ஊதியம் பெறுவோருக்கு வீட்டு வாடகைப் படி, பயண விடுப்புப் படி, மருத்துவச் செலவு உள்பட குறிப்பிட்ட அளவுக்குள் செய்யப்படும் செலவுகளுக்கு மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. இதனால், மாத ஊதியம் பெறுவோர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, மாத ஊதியம் பெறுவோருக்கு Standard Deduction எனப்படும் சீரான வரிப்பிடித்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுறது. இதன்படி ஒட்டுமொத்த சம்பளத்தொகையில் 10 சதவீதம் வரியாக பிடித்தம் செய்யும் முறை அமல்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.