​​ சீனாவில் அதிவேக ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் அதிவேக ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சீனாவில் அதிவேக ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Jan 26, 2018 11:02 AM

சீனாவில் அதிவேக ரயில் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள டிங்யுவான் கவுண்டியில் சூசவ் நகரில் ((Dingyuan County of Chuzhou City)) இந்த விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக வந்த ரயிலின் இரண்டாவது பெட்டியில் திடீரென தீப்பிடித்தது.

இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த அவர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்த ஷாங்காய் ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது.