​​ அரசு ஊழியர் குடியிருப்பில் பாதுகாப்பின்றி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் 2 தொழிலாளர்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு ஊழியர் குடியிருப்பில் பாதுகாப்பின்றி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் 2 தொழிலாளர்கள்

Published : Nov 09, 2018 6:47 PM

அரசு ஊழியர் குடியிருப்பில் பாதுகாப்பின்றி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் 2 தொழிலாளர்கள்

Nov 09, 2018 6:47 PM

நெல்லையில் அரசு ஊழியர் குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி 2 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெருமாள்புரம் அன்பு நகரில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பில், சுமார் 150 வீடுகள் உள்ளன.

இப்பகுதியின் கழிவுநீர், பாதாள சாக்கடை மூலம் மாநகராட்சிக்குச் சொந்தமான 50 அடி ஆழமான கழிவுநீர் தொட்டிக்கு வருகிறது. அங்கிருந்து கழிவுநீர் பம்பிங் செய்யப்படும். இந்தக் கிணற்றில் 2 துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுகளை கையால் அள்ளி அகற்றும் பணியில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உரிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி,  தொழிலாளர்களை கழிவுநீர் தொட்டியில் இறக்கி வேலை வாங்குவது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.