​​ இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல்

Published : Nov 09, 2018 6:42 PMஇளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்திய தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல்

Nov 09, 2018 6:42 PM

இளம் பெண்களை வைத்து ஆடல், பாடல் நடத்தியது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் தனியார் ஹோட்டலின் மதுபான விடுதிக்கு சீல் வைத்துள்ள போலீசார், 10 பேரை பிடித்துள்ளனர். அரும்பாக்கம் நூறடி சாலையில் இயங்கி வந்த இந்த பாரில்  போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பாடல்களை சத்தமாக ஒலிக்கவிட்டு இளைஞர்களும், இளம் பெண்களும் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இது போன்ற ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் மது விடுதிகளில் அனுமதிக்கப்படாத நிலையில் சட்ட விரோதமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ஹோட்டல் மேலாளர் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களில் 7 பேர் பெண்கள். அந்த 7 பெண்களும் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.