​​ சோதனையிட வந்த போலீசாரை தடுத்து நிறுத்திய காங். முன்னாள் எம்பி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோதனையிட வந்த போலீசாரை தடுத்து நிறுத்திய காங். முன்னாள் எம்பி

Published : Nov 09, 2018 6:26 PM

சோதனையிட வந்த போலீசாரை தடுத்து நிறுத்திய காங். முன்னாள் எம்பி

Nov 09, 2018 6:26 PM

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஒருவர், தனது நண்பரின் வீட்டில் போலீசார் மேற்கொள்ள இருந்த சோதனையை நிறுத்துமாறு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவில் விஜயவாடா தொகுதியில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் லகடபதி ராஜகோபால். இவரது நண்பரும், வர்த்தகருமான ஜி.பி.ரெட்டியின் வீட்டில், ஒரு வழக்கு தொடர்பாக சோதனையிட போலீசார் உரிய அனுமதியுடன் சென்றுள்ளனர்.

இதையறிந்த லகடபதி ராஜகோபால், அவர்களுக்கு முன்னதாகவே பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள ஜி.பி.ரெட்டியின் வீட்டுக்கு விரைந்துள்ளார். சோதனையிட வந்த போலீசாரை வாசலிலேயே தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் யோசனை கேட்க போலீசார் செல்போனில் பேசியபோது, லகடபதி ராஜகோபால் செல்போனை பறித்து வீசியுள்ளார். ஒருகட்டத்தில் போலீசார் அங்கு சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர்.